பிரெஞ்சுமொழி - உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் (FrenchMoli - French Vowels and Consonants in Tamil)
ஒரு மனிதனின் உடலும் உயிரும் ஒருங்கே இணைந்து செயல்படுவது போன்றே, ஒரு மொழியின் எழுத்துக்களில் உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் இணைந்து அம்மொழியின் உயிர்மெய் ஒலிகளை தோற்றுவிக்கின்றன.
தமிழ் மொழியில் போன்று, ஒவ்வொரு உயிர்மெய் எழுத்துக்குமான தனித்தனி எழுத்துருக்கள் ஐரோப்பிய மொழிகளில் கிடையாது. எனவே அம்மொழியில் ஒரு மெய்யெழுத்தையும் உயிரெழுத்தையும் (சில ஒன்றுக்கு மேல்) சேர்த்து எழுதியே உயிர்மெய் ஒலிகள் பெறப்படுகின்றன. எனவே பிரெஞ்சு மொழியில் எவ்வாறு ஒரு மெய்யெழுத்து ஒலியும், உயிரெழுத்து ஒலியும் இணைந்து பயன்படுகிறது என்பதை அறிந்துக்கொள்ளுதல் மிகவும் அவசியம்.
பிரெஞ்சுமொழி அரிச்சுவடியில் உள்ள 26 எழுத்துக்களில் 6 உயிர் எழுத்துக்களும் 20 மெய்யெழுத்துக்களும் உள்ளன.
முதலில், பிரெஞ்சு மொழியில் உள்ள உயிரெழுத்துக்களை பார்ப்போம். பிரெஞ்சு மொழியில் உயிரெழுத்துக்களை "லே வொயல்" (Les Voyelles) என்று அழைப்பர்.
பிரெஞ்சு உயிரெழுத்துக்கள் (Les Voyelles)
A = அ
E = ஹுஃ
I = ஈ
O = ஓ
U = ஊh
Y = இ (அரை உயிரெழுத்து (La-semi voyelle))
குறிப்பு: ஆங்கிலத்தில் போன்றே பிரெஞ்சிலும், அதே 5 உயிரெழுத்துக்கள் இருந்தப்போதிலும், பிரெஞ்சில் கூடுதலாக 'Y' எழுத்தையும் ஒரு அரை-உயிரெழுத்தாக (semi-vowel) பயன்படுத்துவதனால் மொத்தம் 6 உயிரெழுத்துக்கள் ஆகும்.
பிரெஞ்சு மெய்யெழுத்துக்கள் (Les Consonnes)
பிரெஞ்சு மொழியில் மெய்யெழுத்துக்களை "லே கொன்சோன்" (Les Consonnes) என்று அழைப்பர். பிரெஞ்சுமொழியில் 20 மெய்யெழுத்துக்கள் உள்ளன. அவைகளாவன:
B = bபே
C = சே
D = dதே
F = எfப்
G = ஜே (J)
H = ஆஷ்
J = ஜி (G)
K = க
L = எல்
M = எம்
N = என்
P = பே
Q = கிவ்
R = ஏர்
S = எஸ்
T = த்தே
V = வே
W = டுபுளு-வே
X = இக்ஸ்
Z = செzத்
குறிப்பு: 'Y' அரை உயிரெழுத்தையும் சேர்த்து 6 உயிரெழுத்துக்கள் பிரெஞ்சில் இருப்பதனால், மிகுதியாக உள்ள 20 எழுத்துக்களும் மெய்யெழுத்துக்கள் ஆகும்.
இவற்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
எதிர்வரும் பாடங்களில் ஒரு மெய்யெழுத்துடன் உயிரெழுத்து இணைந்து எவ்வாறு உயிர்மெய் ஒலிகள் தோற்றுவிக்கப்படுகின்றன என்பதைப் பார்ப்போம். அவை ஆங்கிலத்தில் எழுத்துக்களை கூட்டி ஒலிப்பது அல்லது வாசிப்பது போன்று அல்லாமல், பிரெஞ்சுமொழியின் ஒலிப்பு முறைமை மிகவும் வேறுபட்டது. எனவே அவற்றை விரிவாகவும் விளக்கமாகவும் பார்ப்பது மிக முக்கியம். இவற்றை சரியான விளக்கத்துடன் விளங்கிக்கொண்டால், பிரெஞ்சுமொழியை எளிதாக எவரும் கற்றுக்கொள்ளலாம்.
அவற்றை அடுத்த பாடத்தில் பார்ப்போம்.
நன்றி!
அன்புடன்
ச. தங்கவடிவேல் | Sa Thangawadivel
_ _ _
Comments
Post a Comment