பிரெஞ்சுமொழி - உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் (FrenchMoli - French Vowels and Consonants in Tamil)
ஒரு மனிதனின் உடலும் உயிரும் ஒருங்கே இணைந்து செயல்படுவது போன்றே, ஒரு மொழியின் எழுத்துக்களில் உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் இணைந்து அம்மொழியின் உயிர்மெய் ஒலிகளை தோற்றுவிக்கின்றன. தமிழ் மொழியில் போன்று, ஒவ்வொரு உயிர்மெய் எழுத்துக்குமான தனித்தனி எழுத்துருக்கள் ஐரோப்பிய மொழிகளில் கிடையாது. எனவே அம்மொழியில் ஒரு மெய்யெழுத்தையும் உயிரெழுத்தையும் (சில ஒன்றுக்கு மேல்) சேர்த்து எழுதியே உயிர்மெய் ஒலிகள் பெறப்படுகின்றன. எனவே பிரெஞ்சு மொழியில் எவ்வாறு ஒரு மெய்யெழுத்து ஒலியும், உயிரெழுத்து ஒலியும் இணைந்து பயன்படுகிறது என்பதை அறிந்துக்கொள்ளுதல் மிகவும் அவசியம். பிரெஞ்சுமொழி அரிச்சுவடியில் உள்ள 26 எழுத்துக்களில் 6 உயிர் எழுத்துக்களும் 20 மெய்யெழுத்துக்களும் உள்ளன. முதலில், பிரெஞ்சு மொழியில் உள்ள உயிரெழுத்துக்களை பார்ப்போம். பிரெஞ்சு மொழியில் உயிரெழுத்துக்களை " லே வொயல்" (Les Voyelles) என்று அழைப்பர். பிரெஞ்சு உயிரெழுத்துக்கள் (Les Voyelles) A = அ E = ஹுஃ I = ஈ O = ஓ U = ஊh Y = இ (அரை உயிரெழுத்து (La-semi voyelle)) குறிப்பு: ஆங்கிலத்...