பிரெஞ்சுமொழி அரிச்சுவடி (French Alphabet in Tamil)

ஆங்கில அரிச்சுவடியில் போன்றே பிரெஞ்சு அரிச்சுவடியிலும் அதே 26 உரோமன் எழுத்துக்களே உள்ளன. ஆனாலும் ஆங்கில எழுத்துக்களின் ஒலிப்பு முறைக்கும் பிரெஞ்சு எழுத்துக்களின் ஒலிப்பு முறைக்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது. எனவே பிரெஞ்சு மொழியை முழுமையாக கற்பதற்கு, நாம் முதலில் பிரெஞ்சு அரிச்சுவடியில் உள்ள எழுத்துக்களின் ஒலிப்பு முறையை சரியாக ஒலிக்க (உச்சரிக்க) கற்றுக்கொள்ள வேண்டும். கவனிக்கவும் : எழுத்துக்களின் வரிவடிவம் ஒரே மாதிரி இருப்பதால், ஆங்கில அரிச்சுவடியில் உள்ள எழுத்துகளை ஒலிப்பது/ உச்சரிப்பது போன்று பிரெஞ்சு எழுத்துக்களை உச்சரிக்கக் கூடாது. பிரெஞ்சுமொழியில், பிரெஞ்சு அரிச்சுவடியை “ லல்fபbபே fப்ரொன்சே” (L’alphabet Français) என்று அழைப்பர். இச்சொற்றொடரை பார்த்தீர்களானால், இதில் உள்ள `t` மற்றும் கடைசியில் உள்ள `s` எழுத்துக்கள் ஒலிக்கப்படுவதில்லை. அவற்றை பிரெஞ்சில் மௌன எழுத்துக்கள் (Lettres de silence) என்பர். அவற்றை எதிர்வரும் "பிரெஞ்சு ஒலிப்பு முறைமை" பாடங்களில் விரிவாகப் பார்க்கலாம். இன்று இப்பாடத்தை மட்டும் பார்ப்போம். பிரெஞ்சு நெடுங்கணக்கு அல்லது பிரெஞ்சு அரிச்சுவடி முதலில்...