பிரெஞ்சு எண்கள் 1 - 100 (French Numbers 1 - 100 in Tamil)

பிரெஞ்சு இலக்கங்கள் -  தமிழ்வழி பிரெஞ்சு மொழி  கல்வி

வணக்கம் உறவுகளே! 

இன்று நாம் இந்த பிரெஞ்சுமொழி பாடத்தில், எப்படி பிரெஞ்சு எண்களை 1 முதல் 100 வரை எண்ண வேண்டும் என்று பார்ப்போம். பிரெஞ்சு மொழியில் எண்களை 'லெ நொம்bப்ர' (Les nombres) என்று அழைப்பர். (Les nombres de 1 à 100 en français) 

உங்கள் ஒலிப்பு/ உச்சரிப்பு பயிற்சிக்காக, ஒவ்வொரு பிரெஞ்சு எண்ணினதும் ஒலிப்பு வடிவம் தமிழ் எழுத்துக்களால் எழுதிக்காட்டப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழ் எழுத்துக்கள் கொண்டு பிரெஞ்சு மொழிச் சொற்களை அல்லது பிரெஞ்சு மொழியின் ஒலிகளை துல்லியமாக எழுதிக்காட்டுதல் என்பது முற்றிலும் சாத்தியமானது அல்ல என்பதை முதலில் எல்லோருக்கும் அறியத்தருகிறேன். அதேவேளை பிரெஞ்சு எண்களின் ஒலிகளை எழுத்துவடிவில் எழுதிக் காட்டாமல், எவரும் எமது மொழிக் குடும்பத்துடன் தொடர்பில்லாத, ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பிரெஞ்சு மொழியின் ஒலிப்புமுறையை எளிதாக கற்கவும் இயலாது. எனவே, முடிந்தவரை எளிதாக தமிழ் எழுத்துக்கள் கொண்டு எழுதிக்காட்டப் பட்டுள்ளன என்பதை கருத்தில் கொள்க. அதேவேளை தமிழ் தவிர்ந்த ஆங்கில எழுத்துக்களும் தமிழில் புழங்கும் கிரந்த எழுத்துக்களும் இப்பாடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை பொறுத்தருள்க.

கவனிக்கவும்:

அத்துடன் இன்னொன்றையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்; அது ஏற்கெனவே எமது தமிழர்களான பெரும்பாலோரது புழக்கத்தில் இருக்கும் தங்கிலிஷ் அல்லது தமிங்கில முறையில் ஆங்கிலத்தில் எழுத்துக்களை கூட்டி வாசிக்கும் முறையில், பிரெஞ்சுச் சொற்களை வாசிக்க முடியாது. எடுத்துக்காட்டாக சில சொற்களை பாருங்கள்: சுழியத்தை ஆங்கிலத்தில் (“zero”/”zசீரோ”) என்று கூறுவர், ஆனால் அதே எழுத்துக்களில் எழுதியதை பிரெஞ்சில் (“zéro”/”zசேரோ”) என்று வாசிக்க வேண்டும். ஆங்கிலத்தில் (“six“/“சிக்ஸ்”) என்று வாசித்து பழக்கப்பட்ட சொல்லை; பிரெஞ்சில் (“six”/“சீஸ்”) என்று வாசிக்க வேண்டும். இப்படி பல உள. எனவே ஆங்கிலத்திற்கும் பிரெஞ்சுக்குமான ஒலிப்புமுறை முற்றிலும் வேறுபட்டது என்பதை நினைவில் கொள்ளவும்.

இ:

பிரெஞ்சு

பிரெஞ்சு ஒலிப்பு

தமிழ்

0

Zéro

[zசேரோ]

சுழியம்

1

Un

[ஆ°]

ஒன்று

2

Deux

[dதூz]

இரண்டு

3

Trois

[த்(ரு)வா]

மூன்று

4

Quatre

[கெத்ர்]

நான்கு

5

Cinq

[சங்க்]

ஐந்து

6

Six

[சீஸ்]

ஆறு

7

Sept

[செத்]

ஏழு

8

Huit

[வித்]

எட்டு

9

Neuf

[நெfப்]

ஒன்பது

10

Dix

[dதீzஸ்]

பத்து

11

Onze

[ஓன்zஸ்]

பதினொன்று

12

Douze

[dதூzஸ்]

பன்னிரண்டு

13

Treize

[த்ரேzஸ்]

பதின்மூன்று

14

Quatorze

[கெத்தோ(ர்)zஸ்]

பதினான்கு

15

Quinze

[கேன்zஸ்]

பதினைந்து

16

Seize

[சேzஸ்]

பதினாறு

17

Dix-sept

[dதீzஸ்-செத்]

பதினேழு

18

Dix-huit

[dதீzஸ்-வித்]

பதினெட்டு

19

Dix-neuf

[dதீzஸ்-நெfப்]

பத்தொன்பது

20

Vingt

[வாங்]

இருபது

21

Vingt et un

[வாங்'தே-ஆ°]

இருபத்தொன்று

22

Vingt-deux

[வாங்-dதூz]

இருபத்திரண்டு

23

Vingt-trois

[வாங்-த்(ரு)வா]

இருபத்தி மூன்று

24

Vingt-quatre

[வாங்-கெத்(ர்)]

இருபத்தி நான்கு

25

Vingt-cinq

[வாங்-சங்க்]

இருபத்தி ஐந்து

26

Vingt-six

[வாங்-சீஸ்]

இருபத்தி ஆறு

27

Vingt-sept

[வாங்-செத்]

இருபத்தி ஏழு

28

Vingt-huit

[வாங்-வித்]

இருபத்தி எட்டு

29

Vingt-neuf

[வாங்-நெfப்]

இருபத்தி ஒன்பது

30

Trente

[த்ரோந்த்]

முப்பது

31

Trente et un

[த்ரோந்தே-ஆ°]

முப்பத்தொன்று

32

Trente-deux

[த்ரோந்த்-dதூz]

முப்பத்திரண்டு

33

Trente-trois

[த்ரோந்த்-த்(ரு)வா]

முப்பத்தி மூன்று

34

Trente-quatre

[த்ரோந்த்-கெத்(ர்)]

முப்பத்தி நான்கு

35

Trente-cinq

[த்ரோந்த்-சங்க்]

முப்பத்தி ஐந்து

36

Trente-six

[த்ரோந்த்-சீஸ்]

முப்பத்தி ஆறு

37

Trente-sept

[த்ரோந்த்-செத்]

முப்பத்தி ஏழு

38

Trente-huit

[த்ரோந்த்-வித்]

முப்பத்தி எட்டு

39

Trente-neuf

[த்ரோந்த்-நெfப்]

முப்பத்தி ஒன்பது

40

Quarante

[கேரொந்த்]

நாற்பது

41

Quarante et un

[கேரொந்தே-ஆ°]

நாற்பத்தி ஒன்று

42

Quarante-deux

[கேரொந்த்-dதூz]

நாற்பத்தி இரண்டு

43

Quarante-trois

[கேரொந்த்-த்(ரு)வா]

நாற்பத்தி மூன்று

44

Quarante-quatre

[கேரொந்த்-கெத்(ர்)]

நாற்பத்தி நான்கு

45

Quarante-cinq

[கேரொந்த்-சங்க்]

நாற்பத்தி ஐந்து

46

Quarante-six

[கேரொந்த்-சீஸ்]

நாற்பத்தி ஆறு

47

Quarante-sept

[கேரொந்த்-செத்]

நாற்பத்தி ஏழு

48

Quarante-huit

[கேரொந்த்-வித்]

நாற்பத்தி எட்டு

49

Quarante-neuf

[கேரொந்த்-நெfப்]

நாற்பத்தி ஒன்பது

50

Cinquante

[சங்கோந்த்]

ஐம்பது

51

Cinquante et un

[சங்கோந்தே-ஆ°]

ஐம்பத்தொன்று

52

Cinquante-deux

[சங்கோந்த்-dதூz]

ஐம்பத்திரண்டு

53

Cinquante-trois

[சங்கோந்த்-த்(ரு)வா]

ஐம்பத்து மூன்று

54

Cinquante-quatre

[சங்கோந்த்-கெத்(ர்)]

ஐம்பத்து நான்கு

55

Cinquante-cinq

[சங்கோந்த்-சங்க்]

ஐம்பத்து ஐந்து

56

Cinquante-six

[சங்கோந்த்-சீஸ்]

ஐம்பத்து ஆறு

57

Cinquante-sept

[சங்கோந்த்-செத்]

ஐம்பத்து ஏழு

58

Cinquante-huit

[சங்கோந்த்-வித்]

ஐம்பத்து எட்டு

59

Cinquante-neuf

[சங்கோந்த்-நெfப்]

ஐம்பத்தொன்பது

60

Soixante

[சுவாசோந்த்]

அறுபது

61

Soixante et un

[சுவாசோந்தே-ஆ°]

அறுபத்தி ஒன்று

62

Soixante-deux

[சுவாசோந்த்-dதூz]

அறுபத்தி இரண்டு

63

Soixante-trois

[சுவாசோந்த்-த்(ரு)வா]

அறுபத்தி மூன்று

64

Soixante-quatre

[சுவாசோந்த்-கெத்(ர்)]

அறுபத்தி நான்கு

65

Soixante-cinq

[சுவாசோந்த்-சங்க்]

அறுபத்தி ஐந்து

66

Soixante-six

[சுவாசோந்த்-சீஸ்]

அறுபத்தி ஆறு

67

Soixante-sept

[சுவாசோந்த்-செத்]

அறுபத்தி ஏழு

68

Soixante-huit

[சுவாசோந்த்-வித்]

அறுபத்தி எட்டு

69

Soixante-neuf

[சுவாசோந்த்-நெfப்]

அறுபத்தி ஒன்பது

70

Soixante-dix

[சுவாசோந்த்-dதீzஸ்]

எழுபது

71

Soixante-onze

[சுவாசோந்தே-ஓன்zஸ்]

எழுபத்தொன்று

72

Soixante-douze

[சுவாசோந்த்-zதூzஸ்]

எழுபத்திரண்டு

73

Soixante-treize

[சுவாசோந்த்-த்ரேzஸ்]

எழுபத்தி மூன்று

74

Soixante-quatorze

[சுவாசோந்த்-கெத்தோ(ர்)zஸ்]

எழுபத்தி நான்கு

75

Soixante-quinze

[சுவாசோந்த்-கேன்zஸ்]

எழுபத்தி ஐந்து

76

Soixante-seize

[சுவாசோந்த்-சேzஸ்]

எழுபத்தி ஆறு

77

Soixante-dix-sept

[சுவாசோந்த்-dதீzஸ்-செத்]

எழுபத்தி ஏழு

78

Soixante-dix-huit

[சுவாசோந்த்-dதீzஸ்-வித்]

எழுபத்தி எட்டு

79

Soixante-dix-neuf

[சுவாசோந்த்-dதீzஸ்-நெfப்]

எழுபத்தி ஒன்பது

80

Quatre-vingts

[கெத்ரோ-வாங்]

எண்பது

81

Quatre-vingt-un

[கெத்ரோ-வாங்-ஆ°]

எண்பத்தொன்று

82

Quatre-vingt-deux

[கெத்ரோ-வாங்-dதூz]

எண்பத்திரண்டு

83

Quatre-vingt-trois

[கெத்ரோ-வாங்-த்(ரு)வா]

எண்பத்தி மூன்று

84

Quatre-vingt-quatre

[கெத்ரோ-வாங்-கெத்(ர்)]

எண்பத்தி நான்கு

85

Quatre-vingt-cinq

[கெத்ரோ-வாங்-சங்க்]

எண்பத்தி ஐந்து

86

Quatre-vingt-six

[கெத்ரோ-வாங்-சீஸ்]

எண்பத்தி ஆறு

87

Quatre-vingt-sept

[கெத்ரோ-வாங்-செத்]

எண்பத்தி ஏழு

88

Quatre-vingt-huit

[கெத்ரோ-வாங்-வித்]

எண்பத்தி எட்டு

89

Quatre-vingt-neuf

[கெத்ரோ-வாங்-நெfப்]

எண்பத்தி ஒன்பது

90

Quatre-vingt-dix

[கெத்ரோ-வாங்-dதீzஸ்]

தொண்ணூறு

91

Quatre-vingt-onze

[கெத்ரோ-வாங்-ஓன்zஸ்]

தொண்ணூற்றி ஒன்று

92

Quatre-vingt-douze

[கெத்ரோ-வாங்-dதூzஸ்]

தொண்ணூற்றி இரண்டு

93

Quatre-vingt-treize

[கெத்ரோ-வாங்-த்ரேzஸ்]

தொண்ணூற்றி மூன்று

94

Quatre-vingt-quatorze

[கெத்ரோ-வாங்-கெத்தோ(ர்)zஸ்]

தொண்ணூற்றி நான்கு

95

Quatre-vingt-quinze

[கெத்ரோ-வாங்- கேன்zஸ்] 

தொண்ணூற்றி ஐந்து

96

Quatre-vingt-seize

[கெத்ரோ-வாங்- சேzஸ்]

தொண்ணூற்றி ஆறு

97

Quatre-vingt-dix-sept

[கெத்ரோ-வாங்-dதீzஸ்-செத்]

தொண்ணூற்றி ஏழு

98

Quatre-vingt-dix-huit

[கெத்ரோ-வாங்-dதீzஸ்-வித்]

தொண்ணூற்றி எட்டு

99

Quatre-vingt-dix-neuf

[கெத்ரோ-வாங்-dதீzஸ்-நெfப்]

தொண்ணூற்றி ஒன்பது

100

Cent

[சொன்]

நூறு

பிரெஞ்சு எண்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை நாம் மேலே பார்த்தோம். அதில் சில எண்களை எண்ணும் போது அல்லது ஒலிக்கும் போது உங்களுக்கு சில கேள்விகள் எழுந்திருக்கலாம், சிலவேளை ஆச்சரியமாகவும் இருந்திருக்கலாம். ஏனென்றால், அவை நாம் நமது தாய்மொழியில் தமிழ் எண்களை எண்ணும் முறைக்கும், பிரெஞ்சு மொழியில் எண்களை எண்ணும் முறைக்கும் இடையே உள்ள வேறுபாடு அதுவாக இருக்கும். உண்மையில் எண்களை எண்ணும் முறைமை பிரெஞ்சில் ஒரு ஒழுங்கற்ற முறையாகவே இருக்கிறது. 


கீழே வழங்கப்பட்டுள்ள மேலதிக விளக்கங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கலாம். அத்துடன் பிரெஞ்சு எண்களின் ஒலிப்புமுறை தொடர்பான விளக்கங்களையும் பாருங்கள்.


பிரெஞ்சு எண்களின் ஒலிப்புமுறை

இலக்கம் 11 இலிருந்து 16 வரை, ஆங்கிலத்தில் எண்களை எண்ணும் முறைப் போன்றே இருக்கும்.

  • 11 =

  • 12

  • 13

  • 14

  • 15

  • 16

அதன்பின்னர் 17, 18, 19 போன்ற எண்களை, பத்து + ஏழு, பத்து + எட்டு, பத்து + ஒன்பது போன்றவாறு எண்ண வேண்டும்.

  • 10+7 = 17

  • 10+8 = 18

  • 10+9 = 19

அதன்பின் அதே கூட்டல் முறையில் ஒரே சீராக 69 வரை எண்ணலாம்.

  • 60+1 = 61

  • 60+2 = 62

  • 60+3 = 63

  • 60+4 = 64

  • 60+5 = 65

  • 60+6 = 66

  • 60+7 = 67

  • 60+8 = 68

  • 60+9 = 69

அதன் பின்னர்: 70 தாவது எண்ணுக்கு என்று ஒரு தனி சொல் பிரெஞ்சில் இல்லை. எனவே எழுபதை, அறுபது + பத்து (60+10) = 70 என்று கூட்டல் வடிவில் எண்ணவேண்டும். அதனைத் தொடர்ந்து அறுபது + பதினொன்று (60+11) = 71, அறுபது + பன்னிரண்டு (60+12) = 72 என அற்பது + பத்தொன்பது (60+19) = 79 வரை அதே கூட்டல் முறையில் எண்களை எண்ண வேண்டும்.

  • 60+10 = 70

  • 60+11 = 71

  • 60+12 = 72 

  • 60+13 = 73

  • 60+14 = 74

  • 60+15 = 75

  • 60+16 = 76

  • 60+17 = 77

  • 60+18 = 78

  • 60+19 = 79

80 தாவது எண்ணிற்கு என்றும் ஒரு தனி சொல் பிரெஞ்சில் இல்லை. இதுவரை கூட்டல் வடிவில் இருந்த பிரெஞ்சு எண்முறை, இனி பெருக்கலும் கூட்டலுமாக மாற்றம் பெறும். அதன்படி எண்பதை, நான்கு x இருபது (4x20 = 80) என பெருக்கல் முறையில் எண்ண வேண்டும். தொடர்ந்து நான்கு x இருபது + ஒன்று (4x20+1 = 81), நான்கு x இருபது + இரண்டு (4x20+2 = 82) என நான்கு x இருபது + ஒன்பது (4x20+9 = 89) வரை தொடரும்.

எண்பதை பிரெஞ்சில் எழுதும் பொழுது மட்டும் “Quatre-vingts” நான்கு x இருபதுகள் என்பது போன்று இறுதியில் ஒரு “s“ எழுத்தையும் சேர்த்து எழுத வேண்டும். அதற்கான காரணமோ விளக்கமோ எங்கும் காண்பதற்கில்லை. சில பிரெஞ்சு ஆசிரியரியர்கள் அது ஒரு தனித்துவமான எண் என்கின்றனர். நாமும் அப்படியே கொள்வோமாக!

  • 4x20 = 80

  • 4x20+1 = 81

  • 4x20+2 = 82

  • 4x20+3 = 83

  • 4x20+4 = 84

  • 4x20+5 = 85

  • 4x20+6 = 86

  • 4x20+7 = 87

  • 4x20+8 = 88

  • 4x20+9 = 89

இனி 90 கும் ஒரு தனி சொல் பிரெஞ்சில் இல்லை. எனவே நான்கு x இருபது + பத்து (4x20+10 = 90) என நான்குடன் இருபதை பெருக்கி, பின் அத்தொகையுடன் பத்தை கூட்டி எண்ண வேண்டும். அதனை தொடர்ந்து நான்கு x இருபது + பதினொன்று (4x20+11 = 91), நான்கு x இருபது + பன்னிரண்டு (4x20+12 = 92) என நான்கு x இருபது + பத்தொன்பது (4x20+19 = 99) என எண்ணவேண்டும். 

  • 4x20+10 = 90

  • 4x20+11 = 91

  • 4x20+12 = 92

  • 4x20+13 = 93

  • 4x20+14 = 94

  • 4x20+15 = 95

  • 4x20+16 = 96

  • 4x20+17 = 97

  • 4x20+18 = 98

  • 4x20+19 = 99

100 நூறு எனும் எண்ணை பிரெஞ்சில் “சொன்” என்று சொல்லுவர்; அதிலும் “ன்” எழுத்தை முழுதுமாக உச்சரிக்காமல் மூக்கொலியுடன் ஒலிக்க வேண்டும்.

மேலே உள்ள முறையில் தான் பிரெஞ்சு மொழியில் எண்களை எண்ணும் முறை உள்ளது. எனவே இம்முறைப் பற்றி நாம் அதிகம் ஆய்வுசெய்வதையோ சிந்திப்பதையோ விட்டுவிட்டு, அவற்றை மனப்பாடம் செய்து மனதில் பதித்துக் கொள்வது ஒன்றுதான், பிரெஞ்சு கற்கும் எமக்கு இருக்கும் ஒரே வழி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இவை இரண்டாம் மொழியாக அல்லது மூன்றாம் மொழியாக பிரெஞ்சுமொழியை கற்கும் எமக்கு கடினம் போல் தோன்றலாம்; ஆனால் பிரான்சில் வாழும் தமிழ் குழந்தைகள் கூட பிரெஞ்சு மொழியின் எண்முறை பற்றி எந்த சிந்தனையும் குழப்பமும் இன்றி எளிதாகவே கற்றுவிடுகின்றனர். நீங்களும் ஒன்றுக்கு பலமுறை ஒருசில நாட்கள் தொடர்ந்து மனபாடம் செய்தாலே போதும் அவை தானகவே உங்கள் மனதில் பதிந்துவிடும். 

இப்பாடத்தை ஒரு செய்தியாகவோ பதிவாகவோ மட்டும் வாசித்து விட்டுச் செல்லாமல், உங்கள் மனதில் பதியும் வரை மீண்டும் மீண்டும் வாசித்து மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். சத்தமாக வாசித்து பயிற்சி செய்தல் எளிதாக மனதில் பதிவதற்கான ஒரு வழிமுறையாகும்.


சரி, மீண்டும் அடுத்த பாடத்தில் சந்திப்போம். 


எண்கள் தொடர்பான வேறுசில பாடங்களும் விரைவில் வரும்.


நன்றி!


அன்புடன்

ச. தங்கவடிவேல் | SA THANGAWADIVEL

_ _ _

பி.கு.: கீழுள்ள ஐகொன்களை சொடுக்கி, எமது சமூக வலைப்பக்கங்களான: முகநூல் | இன்சுடாகிராம் | டுவிட்டர் | பின்டரசுட் | லின்கிடின் போன்றவற்றின் ஊடாகவும் எம்முடம் இணைந்துக்கொள்ளலாம்.

        

Comments

Post a Comment

Popular posts from this blog

பிரெஞ்சுமொழி - உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் (FrenchMoli - French Vowels and Consonants in Tamil)

பிரெஞ்சுமொழி அரிச்சுவடி (French Alphabet in Tamil)

பிரெஞ்சு கிழமை நாட்கள் (French Days of the Week in Tamil)

பிரெஞ்சு மாதங்கள் (French Months of the Year in Tamil)