Posts

Showing posts with the label LearnFrenchThroughTamil

பிரெஞ்சுமொழி - உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் (FrenchMoli - French Vowels and Consonants in Tamil)

Image
ஒரு மனிதனின் உடலும் உயிரும் ஒருங்கே இணைந்து செயல்படுவது போன்றே, ஒரு மொழியின் எழுத்துக்களில் உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் இணைந்து அம்மொழியின் உயிர்மெய் ஒலிகளை தோற்றுவிக்கின்றன.  தமிழ் மொழியில் போன்று, ஒவ்வொரு உயிர்மெய் எழுத்துக்குமான தனித்தனி எழுத்துருக்கள் ஐரோப்பிய மொழிகளில் கிடையாது. எனவே அம்மொழியில் ஒரு மெய்யெழுத்தையும் உயிரெழுத்தையும் (சில ஒன்றுக்கு மேல்) சேர்த்து எழுதியே உயிர்மெய் ஒலிகள் பெறப்படுகின்றன. எனவே பிரெஞ்சு மொழியில் எவ்வாறு ஒரு மெய்யெழுத்து ஒலியும், உயிரெழுத்து ஒலியும் இணைந்து பயன்படுகிறது என்பதை அறிந்துக்கொள்ளுதல் மிகவும் அவசியம்.  பிரெஞ்சுமொழி அரிச்சுவடியில் உள்ள 26 எழுத்துக்களில் 6 உயிர் எழுத்துக்களும் 20 மெய்யெழுத்துக்களும் உள்ளன.   முதலில், பிரெஞ்சு மொழியில் உள்ள உயிரெழுத்துக்களை பார்ப்போம். பிரெஞ்சு மொழியில் உயிரெழுத்துக்களை " லே வொயல்" (Les Voyelles) என்று அழைப்பர்.  பிரெஞ்சு உயிரெழுத்துக்கள் (Les Voyelles) A = அ E = ஹுஃ  I   =  ஈ  O = ஓ U = ஊh Y = இ (அரை உயிரெழுத்து (La-semi voyelle)) குறிப்பு: ஆங்கிலத்...

FrenchMoli Introduction - பிரெஞ்சுமொழி வலைத்தள அறிமுகம்

Image
வணக்கம்! வாருங்கள் உறவுகளே!   இந்த FRENCHMOLI- பிரெஞ்சுமொழி வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்பதில் மகிழ்ச்சி!  முதலில், இத்தளத்தைப் பற்றியும் இதன் பாடத் திட்டத்தைப் பற்றியும், ஒரு சில வரிகள் உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறோம். நாம் இத்தளத்தை ஆரம்பிக்கும் பொழுது, இதன் முதல் பாடம் எதுவாக இருக்கவேண்டும் என எண்ணியதில், புதிதாக ஒருவர் பிரான்சுக்கோ அல்லது பிரெஞ்சு மொழி பேசும் ஒரு காலணிக்கோ காலடி வைத்ததும், அவர் அங்கே காணும் ஒரு பிரெஞ்சு மொழியினருடன் எவ்வாறு தொடர்பு கொள்வார்? அவரது தொடர்பாடலுக்கு முதலில் பயன்படும் சொற்கள் எவையாக இருக்கும் என நாம் பெற்றுக்கொண்ட பட்டறிவின் அடிப்படையில்; "முகமன் சொற்கள்", "அறிமுக உரையாடல் சொற்கள்", சிறிய உரையாடலுக்கு தேவையான "அடிக்கடி பயன்படும் சொற்றொடர்கள்" போன்றவை முக்கியமும் முதன்மையானதும் என நாம் உணர்ந்தோம். எனவே அவைகளே இத்தளத்தின் அடிப்படை பாடங்களாக வழங்கப்பட்டுள்ளன.  பிரெஞ்சு மொழி பேசும் ஒரு நாட்டில் பிறக்கும் தமிழ்க் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் முன்பே, பிரெஞ்சு மொழியை சரளமாக பேசும்...

Welcome to FrenchMoli! - பிரெஞ்சுமொழி வலைத்தளத்துக்கு நல்வரவு!

Image
வணக்கம்! வாருங்கள் உறவுகளே! Bienvenue en Frenchmoli ! புதிதாக தொடங்கப்பட்ட இந்த FRENCHMOLI - பிரெஞ்சுமொழி வலைத்தளத்திற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். நீங்கள் பிரான்சுக்கு புதிதாக வந்தவராக இருக்கலாம். நீங்கள் பிரான்சுக்கு வந்து ஒரு குறிப்பிட்ட காலமாகியும் கூட பிரெஞ்சு மொழியை கற்கும் வாய்ப்பு, நேரம் கிட்டாதவராக இருக்கலாம். பிரான்சு வந்து வதிவிட/ குடியுரிமை போன்ற நிலையை எட்டுவதற்கான, பிரான்சு அரசு கோரும் A1, A2, B1 போன்ற பிரெஞ்சுமொழி தகமைகளுக்காக பிரெஞ்சு கற்றுக்கொண்டிருப்பவராகவும் இருக்கலாம். பிரெஞ்சு மொழியை கற்று, கல்வி தகமைகளுடன், பிரான்சில் கல்வி வீசா அல்லது தொழில் வீசா பெறுவதற்கான முயற்சியில் உள்ளவராகவும் இருக்கலாம். பிரான்சு நாட்டிற்கு வரும் எண்ணம் அல்லது அம்முயற்சியில் பிரெஞ்சு கற்கும் ஆர்வத்தில் உள்ளவராகவும் இருக்கலாம். பிரெஞ்சு கற்றிருப்பினும், மேலும் அதனை மேம்படுத்திக்கொள்ளும் நோக்குடையவராகவும் இருக்கலாம். எதுவானாலும், இதோ இது உங்களுக்கான தளம்! இந்த பிரெஞ்சுமொழி வலைத்தளத்தில், அடிப்படை முகமன் சொற்கள் முதல் பிரெஞ்சு இலக்கணம் வரை அனைத்து பாடங்களும்...