பிரெஞ்சுமொழி அரிச்சுவடி (French Alphabet in Tamil)



ஆங்கில அரிச்சுவடியில் போன்றே பிரெஞ்சு அரிச்சுவடியிலும் அதே 26 உரோமன் எழுத்துக்களே உள்ளன. ஆனாலும் ஆங்கில எழுத்துக்களின் ஒலிப்பு முறைக்கும் பிரெஞ்சு எழுத்துக்களின் ஒலிப்பு முறைக்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது. 

எனவே பிரெஞ்சு மொழியை முழுமையாக கற்பதற்கு, நாம் முதலில் பிரெஞ்சு அரிச்சுவடியில் உள்ள எழுத்துக்களின் ஒலிப்பு முறையை சரியாக ஒலிக்க (உச்சரிக்க) கற்றுக்கொள்ள வேண்டும்.

  • கவனிக்கவும்: எழுத்துக்களின் வரிவடிவம் ஒரே மாதிரி இருப்பதால், ஆங்கில அரிச்சுவடியில் உள்ள எழுத்துகளை ஒலிப்பது/ உச்சரிப்பது போன்று பிரெஞ்சு எழுத்துக்களை உச்சரிக்கக் கூடாது.

பிரெஞ்சுமொழியில், பிரெஞ்சு அரிச்சுவடியை “லல்fபbபே fப்ரொன்சே” (L’alphabet Français) என்று அழைப்பர். இச்சொற்றொடரை பார்த்தீர்களானால், இதில் உள்ள `t` மற்றும் கடைசியில் உள்ள `s` எழுத்துக்கள் ஒலிக்கப்படுவதில்லை. அவற்றை பிரெஞ்சில் மௌன எழுத்துக்கள் (Lettres de silence) என்பர். அவற்றை எதிர்வரும் "பிரெஞ்சு ஒலிப்பு முறைமை" பாடங்களில் விரிவாகப் பார்க்கலாம். 

இன்று இப்பாடத்தை மட்டும் பார்ப்போம்.

பிரெஞ்சு நெடுங்கணக்கு அல்லது பிரெஞ்சு அரிச்சுவடி

முதலில் பிரெஞ்சு அரிச்சுவடியில் உள்ள ஒவ்வொரு எழுத்தையும் எவ்வாறு ஒலிக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம். எடுத்துக்காட்டாக: ஆங்கிலத்தில் “a” எழுத்தை “எ” என்று ஒலிப்போம்; ஆனால் அதே எழுத்தை பிரெஞ்சில் “ஆ°” என்று ஒலிக்கவேண்டும். அவ்வாறே பிரெஞ்சு அரிச்சுவடியில் உள்ள அனைத்து எழுத்துக்களையும் பிரெஞ்சு ஒலிப்பு முறைபடி ஒலிக்க பழக வேண்டும். 

கீழே பிரெஞ்சு எழுத்துக்களின் ஒலிப்புகளை எளிதாக கற்பதற்காக, தமிழ் எழுத்துக்களில் அவற்றின் ஒலிகள் எழுதிக்காட்டப் பட்டுள்ளன. ஆயினும், அவற்றில் சில எழுத்துக்களின் ஒலிகளை அப்படியே நூற்றுக்கு நூறு வீதம் தமிழில் எழுதிக் காட்ட முடியாது என்பதை கவனத்தில் கொள்க. எனவே சில ஆங்கில எழுத்துக்களையும் தமிழில் புழங்கும் கிரந்த எழுத்துக்களையும் இடையிடையே சேர்த்தே எழுதிகாட்டப்பட்டுள்ளன என்பதை பொறுத்தருள்க.

  • A = ஆ 

  • B = bபெ

  • C = செ

  • D = dதெ

  • E = ஹுஃ

  • F = எfப்

  • G = ஜே

  • H = ஆஷ்

  • I  = ஈ

  • J = ஜி

  • K = க

  • L = எல்

  • M = எம்

  • N = என்

  • O = ஒ

  • P = பே

  • Q = கிவ்

  • R = ஏர்°°

  • S = எஸ்

  • T = த்தே

  • U = ஊஃ

  • V = வே

  • W = துபுளு-வே

  • X = இக்ஸ்

  • Y = ஈ-கிரெக்

  • Z = செdத்

கவனிக்கவும்: பிரெஞ்சு எழுத்துக்களின் ஒலிகளை, தமிழ் எழுத்துக்களில் எழுதிக்காட்டியுள்ள போதிலும், அவை நூற்றுக்கு நூறு வீதம் துல்லியமானவை அல்ல என்பதை மீண்டும் நினைவு படுத்திக்கொள்ளுங்கள். குறிப்பாக e, o, u, r போன்ற எழுக்களின் பிரெஞ்சு ஒலிகளை தமிழ் எழுத்துக்களில் எப்படியும் எழுதி காட்டமுடியாது. இருப்பினும் கீழே வழங்கப்பட்டுள்ள மேலதிக விளக்கங்கள் உங்கள் புரிதலுக்கு உதவும். 

ஒத்த ஒலிப்பு எழுத்துக்கள்

ஆங்கில எழுத்துக்களின் ஒலிப்பிற்கும் பிரெஞ்சு எழுத்துக்களின் ஒலிப்பிற்கும் வேறுபாடு இருந்தாலும், இருமொழியிலும் ஒரே மாதிரி ஒலிக்கப்படும் எழுத்துக்கள் 6 உள்ளன. அவற்றை ஒத்த ஒலிப்பு எழுத்துக்கள் எனலாம். அவைகளாவன:

  • F = எfப்

  • L = எல்

  • M = எம்

  • N = என்

  • O = ஒ

  • S = எஸ்

ஒலிப்பு இடம் மாறும் எழுத்துக்கள்

ஆங்கிலத்தில் ஒலிக்கப்படும் ‘G’ எழுத்தை ஜே’ என்றும்; ‘J’ எழுத்தை  ‘ஜி’ என்றும் இடம் மாறி பிரெஞ்சு மொழியில் உச்சரிக்கப்படுகிறது.

  • G = ஜே (J)

  • J = ஜி (G)

இகர எகர மாற்றம் 

ஆங்கிலத்தில் B = bபி, C = சி, D = dடி, G=ஜி, P = பி, T=ட்டி, V=வி போன்ற எழுத்துக்களை உச்சரிக்கும் போது எழும் இகர ஒலிப்பு, பிரெஞ்சு மொழியில் எகர ஒலிப்பாக ஒலித்தல் பிரெஞ்சு மொழியின் ஒலிப்பு முறைமையாகும். அவற்றை கீழே பார்க்கவும்.

  • B = bபெ

  • C = செ

  • D = dதெ

  • G = ஜெ

  • P = பெ

  • T = தெ ("டி" டிகரம் "தெ" தெகரமாக ஒலிக்கப்படும்)

  • V = வெ

  • W = துபுளு-வெ

குறிப்பு: ‘துபுளு’ எனும் பிரெஞ்சுச் சொல், ஆங்கிலத்தில் ‘double’ (இரட்டை) என்பதற்கு இணையான சொல்லாகும். மேலும் ஆங்கிலத்தில் உள்ள "T" எழுத்தை பிரெஞ்சில் "தெ" என்றே ஒலிப்பர். அத்துடன் "T" ஒலி (ட, டா, டி, டீ, டெ ...) போன்றவை பிரெஞ்சில் இல்லை என்பதை நினைவில் கொள்க.

முற்றிலும் வேறான ஒலிப்பைக் கொண்ட எழுத்துக்கள்

கீழுள்ள எழுத்துக்களின் ஒலிப்புகள், ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் முற்றிலும் வேறுபட்டு இருக்கிறது. எனவே இவ்வெழுத்துக்களில் கூடுதல் கவனம் செலுத்தி, சரியாக ஒலிக்க பயிற்சி பெறவேண்டும். அப்பொழுதுதான் பிரெஞ்சு அரிச்சுவடியை எளிதாக ஒலிக்க முடியும். 

  • E = ஃஹு (ə)

  • H = ஆஷ்

  • I  = ஈ ('e' எழுத்தின் ஒலி) 

  • K = க

  • Q = கிவ் ('கியூவ்' அல்ல)

  • R = ஏர்

  • T = த்தே

  • U = ஊh (ü)

  • V = வெ

  • W = துபுளு-வெ

  • X = இக்ஸ்

  • Y = ஈ-கிரெக்

  • Z = செdத்

பிரெஞ்சு அரிச்சுவடியில் உள்ள எழுத்துக்களை எவ்வாறு ஒலிக்க/உச்சரிக்க வேண்டும் என்பதை மிக தெளிவாக இப்பாடம் விளக்கியிருக்கும். இவற்றை சரியாக விளங்கிக்கொண்டீர்களானால், பிரெஞ்சு அரிச்சுவடி மட்டுமன்றி, பிரெஞ்சு சொற்களின் எழுத்துக்களை கூட்டி வாசிப்பதும் எளிதாக இருக்கும். எனவே, இவற்றை மீண்டும் மீண்டும் வாசித்து மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். கூடிய விரைவில் எளிதாக பிரெஞ்சு கதைக்கலாம். 

சரி உறவுகளே, மீண்டும் அடுத்த படத்தில் சந்திப்போம்! 

இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால்; உங்கள் நண்பர்கள், உறவினர்கள், பிரெஞ்சு கற்க விரும்பும் ஆர்வலர்கள் என அனைவருக்கும் பகிருங்கள்; உங்கள் சமூக வலைப்பக்கங்களிலும் பகிர்ந்து இந்த தளத்திற்கு ஆதரவு தரலாம்.

நன்றி!


அன்புடன் 

ச. தங்கவடிவேல்  | SA. THANGAWADIVEL

_ _ _

பி.கு.: கீழுள்ள ஐகொன்களை சொடுக்கி, எமது சமூக வலைப்பக்கங்களான: முகநூல் | இன்சுடாகிராம் | டுவிட்டர் | பின்டரசுட் | லின்கிடின் போன்றவற்றின் ஊடாகவும் எம்முடம் இணைந்துக்கொள்ளலாம்.

        

Comments

  1. நீங்கள் கொடுத்த LinkedIn இணைப்பு வேலை செய்யவில்லை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிரெஞ்சு எண்கள் 1 - 100 (French Numbers 1 - 100 in Tamil)

பிரெஞ்சுமொழி - உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் (FrenchMoli - French Vowels and Consonants in Tamil)

பிரெஞ்சு கிழமை நாட்கள் (French Days of the Week in Tamil)

பிரெஞ்சு மாதங்கள் (French Months of the Year in Tamil)