Posts

Showing posts from June, 2021

பிரெஞ்சு எண்கள் 1 - 100 (French Numbers 1 - 100 in Tamil)

Image
வணக்கம் உறவுகளே!  இன்று நாம் இந்த பிரெஞ்சுமொழி பாடத்தில், எப்படி பிரெஞ்சு எண்களை 1 முதல் 100 வரை எண்ண வேண்டும் என்று பார்ப்போம். பிரெஞ்சு மொழியில் எண்களை ' லெ நொம்bப்ர' (Les nombres) என்று அழைப்பர். (Les nombres de 1 à 100 en français)  உங்கள் ஒலிப்பு/ உச்சரிப்பு பயிற்சிக்காக, ஒவ்வொரு பிரெஞ்சு எண்ணினதும் ஒலிப்பு வடிவம் தமிழ் எழுத்துக்களால் எழுதிக்காட்டப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழ் எழுத்துக்கள் கொண்டு பிரெஞ்சு மொழிச் சொற்களை அல்லது பிரெஞ்சு மொழியின் ஒலிகளை துல்லியமாக எழுதிக்காட்டுதல் என்பது முற்றிலும் சாத்தியமானது அல்ல என்பதை முதலில் எல்லோருக்கும் அறியத்தருகிறேன். அதேவேளை பிரெஞ்சு எண்களின் ஒலிகளை எழுத்துவடிவில் எழுதிக் காட்டாமல், எவரும் எமது மொழிக் குடும்பத்துடன் தொடர்பில்லாத, ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பிரெஞ்சு மொழியின் ஒலிப்புமுறையை எளிதாக கற்கவும் இயலாது. எனவே, முடிந்தவரை எளிதாக தமிழ் எழுத்துக்கள் கொண்டு எழுதிக்காட்டப் பட்டுள்ளன என்பதை கருத்தில் கொள்க. அதேவேளை தமிழ் தவிர்ந்த ஆங்கில எழுத்துக்களும் தமிழில் புழங்கும் கிரந்த எழுத்துக்களும் இப்பாடத்தில் பயன்படுத்தப்...